15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்கவிட்டு - இன்ஸ்டா காதலனுடன் பெண் ஓட்டம்!
காதலனுடன் குழந்தையின் தாய் தவிக்கவிட்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா காதல்
ஹைதராபாத்தை அடுத்த நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவருக்கு திருமணமாகி 15 மாதத்தில், தனுஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரவீனாவுக்கு இன்ஸ்டாவில் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். தொடர்ந்து கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட முடிவு செய்தார். சம்பவத்தன்று கணவர் வேலைக்கு சென்றதும் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள பஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தாய் கொடூரம்
அங்கு 15 மாத குழந்தையை இருக்கையில் அமர வைத்து விட்டு வெளியில் கிளம்பி செல்கிறார். குழந்தை அங்கும் இங்குமாக நடந்து தனது தாயை தேடியபடி இருந்தது. இதற்கிடையில் குழந்தையின் தாயார் தனது காதலன் கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்றுள்ளார்.
இதனை பார்த்த பயணிகள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் குழந்தையை மீட்டனர். பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், பெண்ணின் காதலன் தனது நண்பனிடம் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி இருந்தது தெரிய வந்தது.
பிரவீனாவின் கணவரும் அங்கு வரவழைக்கப்பட்டார். ஆனால் அவர் தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து குழந்தையை அதன் தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.