பேட்மிண்டன் விளையாடிய 25 வயது நபர் - மாரடைப்பால் உயிரிழப்பு!
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாரடைப்பு
தெலங்கானா, டல்லாடாவைச் சேர்ந்தவர், முன்னாள் துணை சர்பஞ்ச் குண்ட்லா வெங்கடேஸ்வர்லு. இவரது மகன் குண்ட்லா ராகேஷ்(25).
இவர், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்குள்ள உப்பல் மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ்,
இளைஞர் பலி
திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மேலும், வர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.