கணவனுக்கு விஷ ஊசி - கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி!
கணவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
தெலங்கானா, கம்மம் மாவட்டம் பொப்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமால் சாஹேப். இவரது மனைவி இமாம்பி. இவர்களது மகள் திருமணமாகி ஜகையபேட்டையில் உள்ளார். கடந்த வாரம் தனது மகளைப் பார்க்க இமாம்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் மகள் வீடு இருக்கும் ஜகையபேட்டைக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வழியில் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் டூவீலரில் அவரை ஏற்றிக் கொண்டுச் சென்றுள்ளார்.
விஷ ஊசி
சில நிமிடங்களிலேயே லிப்ட் கேட்டு ஏறியவர், மறைத்து வைத்திருந்த ஊசியை ஜமால் சாஹேப்பிற்கு செலுத்தி விட்டு வண்டியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார். ஊசி போடப்பட்டதால், ஜமால் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்க்ததில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஜமால் உடலில் செலுத்தப்பட்ட ஊசியால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்மம் காவல் துறை ஆணையர் விஷ்ணுவாரியார் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
கணவர் கொலை
அப்போது ஜமால் சாஹேப் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," ஜமால் மனைவி இமாம்பிக்கும், மட்கே பள்ளி நாமவராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ஜமால், மனைவியைக் கண்டித்ததுடன் மோகனை மிரட்டியுள்ளார்.
இதனால் தங்களது கள்ள உறவுக்கு இடையூறாக இருக்கும் ஜமாலைக் கொலை செய்வது என ஜமாலின் மனைவி இமாம்பி முடிவு செய்துள்ளர்ர. அதன்படி ஆட்டோ ஓட்டுநர் மோகன், அவரது நண்பரான ஆர்எம்பி மருத்துவர் வெங்கடேஷிடம் ஒரு ஊசியைக் கொடுத்து ஜமால் உடம்பில் செலுத்தச் சொல்லியுள்ளார்.
சிக்கிய மனைவி
இந்த ஊசியை செலுத்தினால் இயற்கையாக மாரடைப்பில் இறந்தது போல் உயிர் போய் விடும். இதனால் சுமார் 2 மாதங்களாக காத்திருந்த மோகன். இமாம்பி, தனியாக வந்த ஜமால் உடலில் மருத்துவர் மூலம் செலுத்தி இந்த கொலையைத் திட்டமிட்டு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊசியைப் போட்ட மருத்துவர் வெங்கடேஷ் மற்றொரு நண்பருடன் தப்பிச் சென்றும் எங்களது விசாரணையில் தெரிய வந்தது" என்றனர்.
இதையடுத்து ஜமால் மறைவுக்கு காரணமாக இமாம்பி, மோகன், வெங்கடேஷ், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.