காதலித்த மகளை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற தந்தை - பகீர் சம்பவம்

Attempted Murder Uttar Pradesh Crime
By Sumathi Aug 07, 2022 07:49 AM GMT
Report

காதலித்த இளம்பெண்ணுக்கு போலி டாக்டர் மூலம் விஷ ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு 

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் குமார். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நவீன்குமாருக்கு மகள் உள்ளார். இவரின் மகள் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு நவீன்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

காதலித்த மகளை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற தந்தை - பகீர் சம்பவம் | Lover Affair Man Gives Contract To Kill Daughter

தந்தையின் எதிர்ப்பை மீறி அவரது மகள் அந்த இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இதனால், தனது மகளை அடித்து உதைத்துள்ளார். மகள் காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தந்தை கொடுமை 

வீட்டில் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு மரத்தில் இருந்த குரங்கை பார்த்து பயந்து தனது மகள் மாடியில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காலில் காயம் ஏற்பட்டதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

காதலித்த மகளை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற தந்தை - பகீர் சம்பவம் | Lover Affair Man Gives Contract To Kill Daughter

அந்த மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு மகளை நவீன் சிகிச்சைக்காக மாற்றியுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்தது.

விஷ ஊசி 

இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள், அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, அதிக அளவில் செலுத்தபட்டால் விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை செலுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், டாக்டர் உடையில் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் ஒரு நபர் நுழைவதை கண்டுபிடித்தனர். மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த நரேஷ் குமார் டாக்டர் உடையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றது தெரியவந்தது.

ஆணவக்கொலை முயற்சி

இதனை தொடர்ந்து நரேஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தில், பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து அப்பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும்படி தன்னிடம் கூறியதாலேயே அவ்வாறு செய்ததாக நரேஷ் ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில், தந்தையான நவீனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மகள் காதலிப்பது தனக்கு பிடிக்கவில்லை எனவும், காதலை கைவிடும்படி பல முறை கூறியும் அவர் கேட்காததால் இவ்வாறு செய்த தாக கூறினார்.

இதற்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தந்தை நவீன் குமார், வார்டு பாய் நரேஷ் குமார், மருத்துவமனை ஊழியாரான பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.