போதையில் 108 ஆம்புலன்ஸை வரவைத்த கணவன் - வெளுத்து வாங்கிய மனைவி!
குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்த நபரை அவரது மனைவி வெளுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
போதை அட்ராசிட்டி
நாமக்கல் சிட்கோ காலனியை சேர்ந்தவர் முருகேசன்(55), இவர் குடிபோதையில் சாலை விபத்தில் அடிபட்டு விட்டேன் என்று 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி நாமக்கல் - திருச்சி சாலையில் இருந்து விரைந்து சென்ற
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் குடிபோதையில் இருப்பதும், எந்த வாகனமும் இடித்த காயமும் இல்லை என்றும் தெரிந்து கொண்டனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த மனைவி,
புரட்டிய மனைவி
ஏன் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்தாய்? மற்றவர்களை காப்பாற்றும் நேரத்தை நீ ஏன் வீணடித்தாய் என தர்ம அடி கொடுத்து கணவனை புரட்டி எடுத்தார். இதனால் போதை தெளிந்து கணவன் தெறித்து ஓடியுள்ளார்.
மேலும், அங்கிருந்தவர்கள் போலீஸ் வருகிறார்கள் எனக் கூறியதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்து ஓடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.