சரக்கு ஆட்டோவில் கொரோனோ நோயாளி... ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவலம்...

Covid19 Madurai Corona patient
By Petchi Avudaiappan May 24, 2021 09:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரையில் கொரோனா நோயாளி ஒருவர் சுமார் 30 கிலோ மீட்டர் சரக்கு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு ஒருவார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே மதுரை பாலமேடு அருகே உள்ள மூடுவார்பட்டியை சேர்ந்த பரணிமுத்து என்ற 31 வயதுடைய நபர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து வந்தார். அவருக்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் பரணி முத்துவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அவரது குடும்பத்தார் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மூடுவார்பட்டி கிராமத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு  பரணிி முத்து கொரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.