கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்.. 10 வருஷமாக கணவருக்கு சாப்பாட்டில் விஷம்

Attempted Murder Kerala Relationship Crime
By Sumathi Nov 09, 2022 08:26 AM GMT
Report

10 ஆண்டுகளாக கணவருக்கு சாப்பாட்டில், மனைவி விஷம் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

கேரளா, திருவனந்தபுரம் பாறசாலை முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர்(49). அரசு பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் மனைவி பிரியா. சிவகாசியைச் சேர்ந்த பிரியாவுக்கும், நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்.. 10 வருஷமாக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் | Wife Tried Kill Husband Relationship Issue Kerala

இந்நிலையில், கணவருக்கு வீட்டில் சாப்பிடும்போதெல்லாம் தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அதன் படி வீட்டில் மனைவி கொடுத்த ஹார்லிக்ஸை குடித்துவிட்டு வெளியே சென்ற கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

 கணவனுக்கு விஷம்

இதனால் 3 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை சீராகியுள்ளது. இதற்கிடையே மனைவி சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வெளியே சாப்பிட்ட சுதீருக்கு உடல்நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், 3 மாதத்தில் வீட்டில் பீரோவில் இருந்த மனைவியின் உடைகளை வெளியே தூக்கி வீசியுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த அம்மோனியம் பாஸ்பேட் விஷம் மற்றும் சிரிஞ்ச் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளார்.

பகீர் தகவல்

மேலும், தன்னை கொலை செய்ய தமிழகத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், மனைவி பிரியா மீதும் அவரது நண்பர் முருகன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், கடந்த 10 வருடங்களாக கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.