கள்ளக்காதலுக்கு இடையூறு - 3 குழந்தைகள், கணவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த கொடூர மனைவி! என்ன நடந்தது?
எகிப்து நாட்டில் காதலுடன் உல்லாசமாக வாழ்வதற்கு இடையூறாக இருப்பதாக கருதி கணவன் மற்றும் 3 குழந்தைகளுக்கு தாயே ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் க்யூனா பகுதியை சேர்ந்த இளம்பெண், தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பும் இருந்து வந்துள்ளது.
இதற்கு இடையூறாக இருந்ததால் கணவன் மற்றும் 3 குழந்தைகளுக்கு காதலனின் ஆலோசனை படி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
இதில் 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் கணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காலவாதியான ஜுஸை அருந்திவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் மிரண்டு போன அந்த இளம்பெண், தான் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதற்கு இடையூறாக என் குடும்பம் இருந்ததால் காதலரின் ஆலோசனைபடி குடும்பத்தை தீர்த்துக்கட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார், கள்ளக்காதலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.