2வது திருமணம் - கணவனை மின்கம்பத்தில் கட்டி அடி பின்னி எடுத்த மனைவி!
2வது திருமணம் செய்த கணவனை, மனைவி மின்கம்பத்தில் கட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது திருமணம்
தெலுங்கானா, பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளியை சேர்ந்தவர் அகிலா. இவர் ஸ்ரீகாந்த் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அவருக்கும் 20 லட்சம் ரூபாய் வரதட்சனையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், மனைவியை ஸ்ரீகாந்த் பிரிந்து சென்றுள்ளார். மேலும் இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து அறிந்த அவரது மனைவி,
செருப்பால் அடித்த மனைவி
அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார். அடஹ்னைத் தொடர்ந்து அவரை, மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார். கோபம் தீராத மனைவி செருப்பு மாலையையும் அணிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், கணவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.