Wife Swap: விபரீத கலாச்சாரம் - மறுத்த மனைவியை அடைத்துவைத்து கணவர் வெறிச்செயல்!

Rajasthan
By Sumathi Oct 17, 2022 10:30 PM GMT
Report

மனைவியை மாற்றிக்கொள்ளும் கேமிற்கு மனைவி வரமறுத்ததாக் கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார்.

Wife Swap

ராஜஸ்தான், பிகானேரில் நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. அங்கு நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "எனது கணவர் அமர் என்னை ஹோட்டல் அறையில் அடைத்துப் பூட்டினார்.

Wife Swap: விபரீத கலாச்சாரம் - மறுத்த மனைவியை அடைத்துவைத்து கணவர் வெறிச்செயல்! | Wife Swap Game Culture In Rajasthan

எனது மொபைலையும் பிடுங்கிக் கொண்டார். பிகானேரில் உள்ள அந்த ஹோட்டலில் நான் தனிமையில் தான் இருந்தேன். அதன் பின்னர் இரண்டு நாட்கள் கிழித்து, அமர் பயங்கர குடிபோதையில் வந்து ஹோட்டல் கதவைத் திறந்தார்.

நடந்தது என்ன?

மது குடிப்பதும், போதைப்பொருள் எடுப்பதும் தனக்கு வழக்கமான ஒன்று என்றார். மேலும், அவர் பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டு இருக்கிறார். ஆண்களுடன் உடலுறவு கொள்வதும் தனக்கு வாடிக்கையான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் என்னிடம் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கேமிற்கு நான் வர வேண்டும் என்றார். நான் அதற்கு முடியாது என்று மறுத்த போது, அவர் என்னைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். மேலும், என்னை பார்த்து உனக்கு மார்டன் கலாச்சாரமே தெரியல.

தாக்குதல்

இப்போல்லாம் இதுதான் ட்ரெண்ட் என்று சொன்னார்.. என்னுடன் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவும் கொண்டார். எனது கணவரின் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கையால் எனக்கு உடலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும்,

நான் அந்த வைப் ஸ்வாப் கேமில் கடைசி வரை கலந்து கொள்ளச் சம்மதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.