கெஞ்சி கேட்ட பிரேம்ஜி.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ சொன்ன மனைவி!
திருமணத்திற்கு பிறகு தனது மனைவி போட்ட கண்டிஷன் குறித்து நடிகர் பிரேம்ஜி வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரேம்ஜி
கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, பாடகர் - இசையமைப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கிறார் பிரேம்ஜி. திரையுலகில் பல பரிமாணங்களில் பிஸியாக இருக்கும் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்தன.
இந்த நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. 20 வயது வித்யாசத்திற்கு மேல் இருக்கும் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
மனைவி
இந்நிலையில் திருமணம் முடிந்த முதல்முதலாக சினி உலகம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது தனது திருமணம் வாழ்க்கை குறித்து பேசியதாவது, “ என் மனைவி இந்துவிடம் எல்லா விஷயமும் பிடிக்கும், ஆனால் என் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல மட்டும் எனக்கு அனுமதி கிடையாது.
திருமணத்திற்கு முன்பாக பார்ட்டிக்கு நிறைய செல்வேன். ஆனால் இப்போது அதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லை. மாதத்திற்கு ஒரு முறை தான் சரி என சொல்லுவார். அது மட்டுமில்லை இரவு 11.30 மணி அல்லது 12 மணி ஆகிவிட்டது
என்றால் உடனே மனைவியிடம் இருந்து அழைப்பு வந்துவிடும்.எங்க இருக்கீங்க, எப்போ வருவிங்க என கொஞ்சம் கண்டிப்பாக கேட்பார்” என்று தெரிவித்துள்ளார்.