பிரேம்ஜி ஜாதகத்தில் அப்படி இருந்துச்சு..இப்போ அதுபடியே தான் நடந்திருக்கு - ருசிகர தகவல்!

Tamil Cinema Premji Amaren Tamil nadu Marriage
By Swetha Jun 10, 2024 10:33 AM GMT
Report

பிரேம்ஜியின் திருமணம் நேற்று திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடந்தது.

பிரேம்ஜி ஜாதகம்

கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, பாடகர் - இசையமைப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கிறார் பிரேம்ஜி. திரையுலகில் பல பரிமாணங்களில் பிஸியாக இருக்கும் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்தன.

பிரேம்ஜி ஜாதகத்தில் அப்படி இருந்துச்சு..இப்போ அதுபடியே தான் நடந்திருக்கு - ருசிகர தகவல்! | Premgi Prediction About His Marriage Is Happening

இந்த நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அவரது கல்யாண பத்திரிகை வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா பொய்யா என்று பல கேள்விகள் எழுந்ததையடுத்து,

பிரேம்ஜிக்கு திருமணம்தான் என்பதை வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து இந்து என்ற சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரை எளிமையாக திருமணம் செய்துள்ளார். அதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

எளிய முறையில் பிரேம்ஜி திருமணம்..மணமகள் இவங்க தான்? வெங்கட் பிரபு தகவல்!

எளிய முறையில் பிரேம்ஜி திருமணம்..மணமகள் இவங்க தான்? வெங்கட் பிரபு தகவல்!

ருசிகர தகவல்

இந்த சூழலில், பிரேம்ஜி தனது திருமணம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில், “எனக்கு எனது அம்மா ஒரு விஷயம் சொன்னார். அதாவது, எனக்கு ஜாதகம் பார்த்தாங்களாம். அதில் என்ன போட்டிருக்கு என்றால், எனது மனைவி வந்து என்னிடம், ஏங்க கொடியில் காயும் புடவையை கொண்டு வாருங்கள் என்று சொன்னால்,

பிரேம்ஜி ஜாதகத்தில் அப்படி இருந்துச்சு..இப்போ அதுபடியே தான் நடந்திருக்கு - ருசிகர தகவல்! | Premgi Prediction About His Marriage Is Happening

நான் அந்தப் புடவையை எடுத்து சலவை செய்து மடித்து கொண்டுவந்து தருவேன். அப்படி எனது மனைவி ஒன்று சொன்னால் 10 செய்வேனாம். மனைவியை அப்படி பார்த்துக்குவேனாம்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

மேலும், நமது திருமணத்தை மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்துவதைவிட திருத்தணி கோயிலில் சிம்ப்பிளாக நடத்தலாம் என்று இந்து சொன்னதாகவும்; அதற்கு பிரேம்ஜி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டதாகவும்ஒரு ருசிகர தகவல் வெளியாகியது.

பிரேம்ஜி ஜாதகத்தில் அப்படி இருந்துச்சு..இப்போ அதுபடியே தான் நடந்திருக்கு - ருசிகர தகவல்! | Premgi Prediction About His Marriage Is Happening

தற்போது இந்த விடியோவை பார்த்த பலரும் இப்போவே அவர் தனது மனைவி சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்துவிட்டாரே. பிரேம்ஜி ஜாதகத்தில் என்ன இருந்ததோ அது நடக்க ஆரம்பிச்சிடுச்சோ என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.