எளிய முறையில் பிரேம்ஜி திருமணம்..மணமகள் இவங்க தான்? வெங்கட் பிரபு தகவல்!
நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
பிரேம்ஜி
கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, பாடகர் - இசையமைப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கிறார் பிரேம்ஜி. திரையுலகில் பல பரிமாணங்களில் பிஸியாக இருக்கும் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

திருமணம் ஆனால், ஒவ்வொரு முறை செய்தி வரும் போதும் அது கடைசியில் பொய்யாகவே போனது. 45 வயது வரை முரட்டு சிங்களாகவே இருந்த பிரேம்ஜிக்கு தற்போது திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. அத்திருமணம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி கோவிலில் நடைபெறவுள்ளது.இது தொடர்பான பத்திரிக்கை அண்மையில் வெளியானது.
இந்த நிலையில், பிரேம்ஜியின் திருமணம் குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள "எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. 'பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?' 'சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?' இதை எல்லாவற்றையும் விட, 'பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?'
வெங்கட் பிரபு
என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை.
திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்..." என்று பதிவிட்டிருக்கிறார்.
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil