திருமண நாள் பரிசு தராத கணவர்; தூங்கும்போது மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!
திருமண நாள் பரிசு தராததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நாள்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் இருவருக்கும் திருமண நாள் வந்துள்ளது. அந்த நாளில் தனது கணவர் பரிசு தருவார் என அந்த இளம்பெண் காத்திருந்துள்ளார்.
கத்திக்குத்து
ஆனால் கணவர் நள்ளிரவு 1.30 மணியளவில் தான் வீடு திரும்பியுள்ளார். மேலும், திருமண நாள் பரிசும் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனைவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கணவனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.