திருமணமாகி 7 ஆண்டுகளாகப் முதலிரவுக்கு மறுத்து வந்த பெண் - நீதிமன்றம் கொடுத்த டிவிஸ்ட்!
திருமணமாகி 7 ஆண்டுகளாகப் பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரூ
கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்தவர் ரவி .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சௌமியா இன்பரைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ரவி மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவில், குறைந்த சம்பளம் வாங்குவதால் அவரின் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.
திருமணமான சில மாதங்களில் விபத்தில் எனது மனைவியின் தந்தை இறந்ததற்கும் நான்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் வேலை செய்யும் இடத்தில் பெண் சக ஊழியர்கள் தொலைப்பேசியில் பேசினாலும், அவர்களுடன் தவறான உறவு வைத்திருப்பதாகக் கூறுவார்.
எப்போதும் என்னைச் சந்தேகித்துக் கொண்டே இருப்பார். தொடர்ந்து விவாகரத்து செய்யுமாறு என்னை வற்புறுத்தி மனைவி வாட்ஸ்அப் செய்தி அனுப்பி தொல்லை கொடுப்பார். இதனைக் கருத்தில் கொண்டு விவாகரத்து வழங்க வேண்டுமென்று ரவி கோரியிருந்தார்.
மறுப்பு
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 2022 ஜனவரி 30 அன்று ரவிக்கு விவாகரத்து வழங்கி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்துத் தான் தனது கணவரை நேசிப்பதாகவும் ,அவருடன் சேர்ந்து வாழ விருப்புவதாகவும் விருப்பம் தெரிவித்து உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும் உயர்நீதி மன்றத்தில் நடந்த விசாரணையில் ,’’ கணவரின் குடும்பத்தினரை மனைவி குறை கூறி வந்துள்ளார். கணவருக்கு 127 பக்கங்களில் அவர் அனுப்பிய மெசஜ் அனுப்பியுள்ளார். மேலும் மனைவிக்குத் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாதது தெரியவந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாதது தெரியவந்தது. எனவே குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.