கள்ள தொடர்பில் இருந்த கணவர்; மாலில் மானத்தை வாங்கிய மனைவி - வைரலாகும் வீடியோ
கள்ளத்தொடர்பில் இருந்த கணவருக்கு மனைவி நூதன தண்டனை ஒன்றை அளித்துள்ளார்.
கள்ள தொடர்பு
திருமணத்திற்கு பின்னர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த தொடர்பு துணைக்கு தெரிய வரும் போது, கொலையில் முடிந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
ஆனால் அமெரிக்காவில் தந்து கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்த அவரது மனைவி அவருக்கு நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளார்.
தண்டனை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெண்ணின் கணவர் 2 ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அவரது மனைவி கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து "எனக்கு 2 வருடங்களாக தொடர்பு இருந்தது. அது எப்படி இருந்தது என்று என்னிடம் கேளுங்கள்” என்று எழுதிய பதாகையை கணவரின் கழுத்தில் மாட்டி அங்குள்ள வால்ட் வைட்மேன் என்ற வணிக வளாகத்தில் நடக்க வைத்துள்ளார். உடன் வரும் அவரது, "இந்த மனிதனுக்கு இரண்டு வருடங்களாக தகாத உறவு இருந்துள்ளது" என கூச்சலிட்டுக்கொண்டே வந்துள்ளார்.
Her husband had a 2-year affair with another woman while his wife was pregnant, so she took him to Walt Whitman Mall this morning to do this 😭 pic.twitter.com/7GtdOYJ0uE
— FearBuck (@FearedBuck) November 23, 2024
இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்த பெண் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசென்கள் பலரும் இந்த தண்டனையை விமர்சித்து வருகின்றனர்.