பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய மனைவி..தலாக் சொன்ன கணவர் - பகீர் சம்பவம்!
மனைவி பிரதமர் மோடியை புகழ்ந்ததால் கணவர் தலாக் சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். இவர் அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது. பிறகு கணவரின் ஊரிலேயே அவர் வசித்து வந்தார்.
அங்கு வந்த மரியம் அயோத்தி நகர சாலைகள், அங்குள்ள வளர்ச்சி, அழகு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் கணவர் முன்னிலையில் புகழ்ந்துள்ளார்.
பகீர் சம்பவம்
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெரியவர்கள் சமாதானப்படுத்திய பிறகு, மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கோபத்தில் இருந்த அர்ஷத், மரியமை அடித்து உதைத்தார்.
பிரதமர் மோடியையும் ஆதித்யநாத்தையும் வசைபாடிய அவர், தன் மனைவியை பார்த்து தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை கூறினார்.மேலும், அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து மரியம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் அர்ஷத் உள்பட அவருடைய குடும்பத்தினர் 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.