வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த மனைவி - முத்தலாக் கூறிய கணவன்!
பாடம் கற்பித்து கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஆசிரியையிடம் கணவன் முத்தலாக் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
முத்தலாக்
உத்தர பிரதேசம் பெரோஷாபாத்தை சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கியை சேர்ந்த தமன்னாவுக்கும் (23) கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து 1 மாதத்திற்குள் முகமது ஷகீல் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் பணம் வாங்கி வரக் கூறி , அவரை வீட்டு விட்டு துரத்தியுள்ளனர்.
ஷாக் சம்பவம்
இதனால், தமன்னா, பாராபங்கியில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சவுதியில் இருந்து வந்த கணவன் மனைவி தமன்னாவை தேடி சென்று அவரோடு 6 நாட்கள் தங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், முகமது ஷகீல்மனைவி வீட்டில் இல்லாததால் அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்த நிலையில் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.