வேலைக்கு செல்ல கூடாது...அதிகாரம் செய்த கணவன் ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்!
கணவர் மீது கொதிக்கும் எண்ணையை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கணவன் அதிகாரம்
மதுரை அப்பன்திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மாலதி(28). இவர் ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்வது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதனால் தொடர்ந்து தனது மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்திருக்கிறார். ஆனால் மாலதி அதை கேட்காமல் தினசரி வேலைக்கு சென்று வந்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரத்தில் மனைவி
இந்த நிலையில், இரவில் இது குறித்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாலதி, செந்தில்குமார் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
இதில் செந்தில்குமார் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 40 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மாலதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.