கொதிக்கும் எண்ணெயில் தவறிவிழுந்த குழந்தை: பரிதாபமாக உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஒன்றரை வயது குழந்தை
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலகாரம் சுட்டுவிட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்துள்ளார்.
பலத்த தீக்காயம்
இதில் பவிஸ்காவுக்கு தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பவிஸ்கா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்குசென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.