லிவிங் டு கெதர்; 4 முறை கருக்கலைப்பு, கழட்டிவிட்ட கணவன் - இளம்பெண் தர்ணா

Marriage Crime Pudukkottai Tiruppur
By Sumathi Oct 13, 2024 06:14 AM GMT
Report

விட்டுச்சென்ற கணவனை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விட்டுச்சென்ற கணவன் 

திருப்பூரைச் சேர்ந்தவர் பரிமளா (31). புதுக்கோட்டை மச்சுவாடி வஉசி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கமாகி, பின்னர் அவரை காதலித்து வந்த நிலையில், ஒன்றை ஆண்டு காலம் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பரிமளா - சதீஷ்குமார்

தொடர்ந்து 2022ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். திருப்பூரில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சதீஷ் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

7 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி; அந்த கையெழுத்து யாருடையது? சீமானுக்கு சம்மன்!

7 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி; அந்த கையெழுத்து யாருடையது? சீமானுக்கு சம்மன்!

மனைவி தர்ணா

பின் மனைவியிடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனைவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார். மேலும், தீஷ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து, தனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

லிவிங் டு கெதர்; 4 முறை கருக்கலைப்பு, கழட்டிவிட்ட கணவன் - இளம்பெண் தர்ணா | Wife Need Live With Husband Protest Pudukottai

திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், சதீஷை தன்னிடமிருந்து அவரது குடும்பத்தினர் தான் பிரித்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள சதீஷின் குடும்பத்தினர், பரிமளாவை விட்டு பிரிவது சதீஷின் தனிப்பட்ட விருப்பம், மேலும் இது குறித்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குடும்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.