Sunday, Jul 6, 2025

7 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி; அந்த கையெழுத்து யாருடையது? சீமானுக்கு சம்மன்!

Vijayalakshmi Seeman
By Sumathi 2 years ago
Report

விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்தபோது போட்ட கையெழுத்து குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கருக்கலைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

7 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி; அந்த கையெழுத்து யாருடையது? சீமானுக்கு சம்மன்! | Vijayalakshmi Abortion Summon To Seeman

மேலும், தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து, சுமார் 2 மணி நேரம் 4 பேர் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு கருப்பையில் 'அல்ட்ராசவுண்ட்' என்ற மருத்துவ பரிசோதனையை செய்தனர்.

சீமானுக்கு சம்மன்

அதனையடுத்து, விஜயலட்சுமி கருக்கலைப்புக்கு கையெழுத்து போட்டது யார்? என்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

7 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி; அந்த கையெழுத்து யாருடையது? சீமானுக்கு சம்மன்! | Vijayalakshmi Abortion Summon To Seeman

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.