தவறான உறவினால் கணவனை நெருங்கவிடாத மனைவி - கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்டு கொடூரம்!

Tamil nadu Crime
By Vinothini May 19, 2023 11:15 AM GMT
Report

 கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு தனது கணவனை நெருங்கவிடாமல் மனைவி செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்னும் வனப்பகுதியில், கடந்த மார்ச் 19ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

wife-murdered-husband-for-illegal-affair

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் எரித்து கொலை செய்யப்பட்டது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணை நடத்தினர், அதில் இவரின் மனைவி லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கடுமையாக விசாரித்தும் தனது கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

விசாரணை

இதனை தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தில், "பள்ளி நண்பரான சின்னராஜுடன் எனக்கு நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதனால், கணவருடன் என்னால் நெருக்கமாக இருக்க பிடிக்கவில்லை.

wife-murdered-husband-for-illegal-affair

ஆனால், எனது கணவர் பிரகாஷ், போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம், அவ்வாறு தொந்தரவு கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரை கட்டையால் அடித்தேன். இதில் அவர் உயிரிழந்து விட்டார்.

பின்னர், காதலன் சின்னராஜூடன் சேர்ந்து கணவர் சடலத்தை வேனில் எடுத்துச் சென்று, சானமாவு காட்டில் தீ வைத்து உடலை எரித்ததால் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம்.

ஆனால், விசாரணையில் மாட்டிக்கொண்டோம்" இன்று கூறியுள்ளார்.

மேலும், போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.