கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கூண்டோடு மாற்றுக் கட்சியில் இணைய திட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து,, மாற்றுக்கட்சியில் சேருவது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவித்தார். இதற்கு முன்னதாகவே, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் தனது பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகித்த, மாவட்ட, ஒன்றியம், நகரம், மாநகர நிர்வாகிகள், கடந்த 2 நாட்களாக முன்னாள் ரஜினி மக்கள் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசனை சந்தித்து, மாற்றுக் கட்சியில் சேருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நிர்வாகிகள் சிலர் கூறும் போது, மீண்டும் ரசிகர் மன்றத்தில் செயல்பட முடியாத நிலையில் உள்ளோம். ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டதால், ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
அதற்காக மக்கள் மன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு,
எங்களை 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றம், மக்கள் மன்ற பணிகளில் வழி நடத்திச் சென்ற கேவிஎஸ் சீனிவாசனை, பின் தொடர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.