காதலுக்கு தடையாக இருந்த கணவன் - ஹவுஸ் ஓனருடன், மனைவி வெறிச்செயல்
கள்ளக்காதலனுடன் திட்டம் தீட்டி, மனைவி கணவனை கொலை செய்துள்ளார்.
கண்டக்டர் கொலை
பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்துரை(43). பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக இருந்துள்ளார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வேல்துரை, பணிக்கு எளிதில் செல்வதற்காக அடைக்கலபட்டணத்தில் சுதாகர்(41), என்பவது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். தொடர்ந்து வேல்துரை தினமும் பணிக்கு செல்லும் பொழுது டூவீலரை பாவூர்சத்திரத்தில் நிறுத்திவிட்டு பேருந்தில் செல்வது வழக்கம்.
சிக்கிய மனைவி
அந்த வகையில் பாவூர்சத்திரம் நோக்கி டூவீலரில் தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வேல்துரை, துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் விசாரணையில்,
பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 36, என்பவரை கைது செய்யப்பட்டார். பின், தொடர் தீவிர விசாரணையில் காரை வேண்டுமென்றே இடது ஓரம் சென்று அவர் மீது மோதி விபத்து செய்தது தெரியவந்தது. வேல்துரையின் மனைவி உமாவிற்கும் வாடகை வீட்டு உரிமையாளர் சுதாகருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதற்கு கணவன் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு வாடகை கார் டிரைவர் ஆறுமுகத்தை பயன்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது உமா, சுதாகர், ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
