தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயம் - ஒன்றரை மாதத்தில் சோகம்!
தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கன்னியாகுமரி, ஆசாரிபள்ளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சந்திரா (44). இவரது மகள் அபிஷா (21). இவருக்கும் கீழபெருவிளையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அபிஷா வில்லுகுறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்தார். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாயம்
இதனால் அபிஷா கணவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாலிச்சங்கிலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதுகுறித்து அபிஷாவின் தாயார் சந்திரா போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.