62 வயதில் திருமணம் செய்த நபர் - இந்தோனேசிய பெண்ணை அறைக்குள் அடைத்த உறவினர்கள்!
புதுமணப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உறவினர்கள் அறைக்குள் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
குமரி, பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர்(62). திருமணமாகாத நிலையில் தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வீடு, வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தாய் ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்துள்ளார்.
இந்நிலையில், 45 வயதுடைய இந்தோனேசிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து, அவரை குமரிக்கு அழைத்து வந்து நாகர்கோவில் தேவாலயத்தில் திருமணம் செய்துள்ளார். ஆனால், இதற்கு அவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் கொடுமை
அப்போது, இரவு சாப்பாடு வாங்குவதற்காக மதபோதகர் வெளியே சென்றிருந்த நிலையில், இந்தோனேசிய பெண்ணை அறைக்குள் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் போலீஸுக்கு புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த பெண்ணை தங்களால் ஏற்க முடியாது என்றும் விடுவிக்க முடியாதென்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் எச்சரித்ததில் உறவினர்கள் அறையை திறந்துள்ளனர். உடனே அந்தப் பெண்னை மீட்டு, இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.