ஒற்றை ஜடை.. மாணவியை அறைக்குள் அடைத்து தலைமை ஆசிரியர் கொடூரம்!
பள்ளிக்கு ஒற்றை ஜடை போட்டு வந்த மாணவியை தலைமை ஆசிரியர் அறைக்குள் பூட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளி மாணவி
உத்தரப்பிரதேசம், நவாப் கனஞ்ச் என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுமித் யாதவ். இந்நிலையில், 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஒற்றை ஜடையுடன் வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவியை கடுமையாக திட்டி, அறைக்குள் அடைத்து அவரது தலைமுடியை கண்டபடி வெட்டியுள்ளார். மேலும் மற்ற மாணவர்களையும் இரட்டை ஜடை போடவில்லையென்றால் இதுதான் நிலைமை என கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
கொடூர செயல்
இதனால், மனமுடைந்த மாணவி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதில், தலை முடியை வெட்டியதோடு அல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுவேன் என்றும் மாணவி போலீசிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீஸார் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் தலைமறைவான தலைமை ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.