தாடியை ஷேவ் செய்ய மறுப்பு - கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி

Uttar Pradesh Relationship
By Sumathi May 02, 2025 08:07 AM GMT
Report

கணவன் தாடியை ஷேவ் செய்ய மறுத்ததால், மனைவி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாடியால் விவகாரம்

உத்தரபிரதேசம், மீரட் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாஹிர். இவர் அர்ஷி என்ற பெண்ணை 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். முகமது இஸ்லாமிய முறைப்படி நீண்ட தாடி வைத்திருந்துள்ளார்.

தாடியை ஷேவ் செய்ய மறுப்பு - கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி | Wife Leaves Husband For Beard Uttar Pradesh

அதனை மனைவி ஷேவ் செய்ய கூறியுள்ளார். ஆனால், அதற்கு முகமது மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முகமது ஜாஹிரின் தம்பியான சபீருடன் அர்ஷிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சபீர் சுத்தமாக ஷேவ் செய்திருப்பார் என கூறப்படுகிறது.

தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

மனைவி செய்த செயல்

திடீரென இருவரும் மயாமாகியுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறும்போது வீட்டில் இருந்து சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷாகிர் இருவரையும் கடந்த மூன்று மாதங்களாகத் தேடிக்கொண்டிருந்தார். எங்கி தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகாரளித்துள்ளார்.

தாடியை ஷேவ் செய்ய மறுப்பு - கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி | Wife Leaves Husband For Beard Uttar Pradesh

அதன் அடிப்படையில் விசாரித்ததில், இருவரும் கடைசியாக பஞ்சாபின் லூதியானாவில் இருந்தார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் தனது கணவரான முகம்மது ஜாஹிருடன் தனக்கு வாழ விருப்பமில்லை.

அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். தாடி பிரச்சனை இல்லை. நான் சபீர் உடன் தான் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.