பேரன் வயது இளைஞருடன் வீட்டை விட்டுச்சென்ற பாட்டி - இறுதியில் அரங்கேறிய ட்விஸ்ட்
பெண் ஒருவர் பேரன் வயதுடைய இளைஞருடன் வீட்டைவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரது மனைவி இந்திராவதி(50). இவர்களுக்கு மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களது வீட்டருகே ஆசாத்(30) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.
ஆசாத்துடன் இந்திராவதி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. மேலும், இந்திராவதிக்கு, உறவுமுறைப்படி ஆசாத் பேரன் ஆவார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அறிந்த கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
சதி திட்டம்
எனவே, இருவரும் வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து கோவிந்த் சாகிப் கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர். இதனையடுத்து கணவரும், அவரது குடும்பத்தினரும் வாழ விடமாட்டார்கள் என எண்ணி, அவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல முயன்றுள்ளார். இதனை அறிந்த கணவன் தப்பித்துக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.