திருமணத்தில் போடப்பட்ட பாடலால் முன்னாள் காதலி நியாபகம் - மணமகன் எடுத்த விபரீத முடிவு
சமீபகாலமாக பெரும்பாலான திருமணங்களில், பாரம்பரிய நடைமுறைகளையும் தாண்டி, பாடல்கள் போடுவது, நடனமாடுவது என குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன்
ஆனால் டெல்லியில் நடந்த திருமணம் ஒன்றில், DJ குழுவினரால் போடப்பட்ட பாடல் ஒன்றால், திருமணமே நின்று போன சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
டெல்லியில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில், DJ குழுவினர், 'சன்னா மெரேயா' என்ற பாடலை இசைத்துள்ளனர்.
இந்த பாடலை கேட்ட மணமகனுக்கு, தன்னுடைய முன்னாள் காதலியின் நினைவு வந்ததால், திருமணத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
'சன்னா மெரேயா' பாடல், ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் வரும், காதல் முறிவு பாடலாகும்.