தினமும் அதை செய்த கணவர் - ஆணுறுப்பை அறுத்து வீசிய மனைவி
கணவரின் ஆணுறுப்பை அறுத்து மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதான தம்பதி
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னப்பா(45) - பச்சையம்மாள்(43) தம்பதியினர். இவர்களுக்கு 23 வயதில் பாலமுருகன் என்ற மகனும், 21 வயதில் பானுப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.
பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியாவை அரியலூர் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
மது பழக்கம்
மது அருந்தும் பழக்கம் உள்ள சின்னப்பா, மது அருந்தி வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். 2 நாட்களுக்கு முன் மகள் பானுபிரியா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அன்றும், சின்னப்பா மது அருந்தி வந்து மனைவி பச்சையம்மாளை தகாத வார்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து பச்சையம்மாளும், பத்மபிரியவும் அருகே உள்ள வீட்டிற்கு தூங்க சென்று விட்டனர்.
நேற்று காலை சின்னப்பா கைகள் மற்றும் கால்களின் நரம்புகள் மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார். சின்னப்பா கை, கால்கள் மற்றும் மர்ம உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக பச்சையம்மாள் தனது உறவினர்களிடம் கூறியிருக்கிறார்.
மனைவி கைது
தகவல் அறிந்த காவல்துறையினர் பச்சையம்மாளை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், எனது கணவர் தினமும் மதுபோதையில் என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் நள்ளிரவில் இரும்பு கம்பியால் தாக்கினேன்.
அவர் உயிர் பிழைத்தால் என்னை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் கத்தியை எடுத்து சின்னப்பாவின் கை கால்களை அறுத்தேன். ஆத்திரம் குறையாததால் அவரின் ஆணுறுப்பை அறுத்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பச்சையம்மாளை கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.