தலைக்கேறிய ஆத்திரம்..கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசிய மனைவி - பகீர் சம்பவம்!
கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திரம்..
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். இந்த தம்பதிக்கு பாலமுருகன் என்ற மகனும், பானுப்பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல பானுப்பிரியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதால் அவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சின்னப்பாவும், பச்சையம்மாளும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்தனர். சின்னாப்பாவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவ்வப்போது குடித்துவிட்டு
பச்சையம்மாளிடம் தகராறு செய்து சண்டையிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்த சூழலில், பானுப்பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். இதனையடுத்து இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சின்னப்பா,
வீட்டில் இருந்த பச்சையம்மாள், பானுப்பிரியா இருவரிடமும் கடிமையாக சண்டையிட்டுள்ளார். இதனால் ஒருக் கட்டதில் பொருமையை இழந்த இருவருமே வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டின் தங்கியுள்ளனர்.
மனைவி
மறுநால் காலை சின்னப்பா வீட்டில் கை கால்கள் மற்றும் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சின்னப்பா தகராறு செய்ததால் பச்சையம்மாள மற்றும் பானுப்பிரியா இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி பக்கத்து வீட்டில் இரவு தங்கினர். பிறகு அதிகாலை 3 மணி அளவில் ச்சையம்மாள் மட்டும் வீட்டிற்கு வந்து, மது போதையில் கிடந்த சின்னப்பாவை கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதை தொடர்ந்து, ஒருவேளை அவர் பிழைந்துக்கொண்டால் தன்னை கொன்று விடுவார் என்று நினைத்த பச்சையம்மாள் ஒரு கத்தியை எடுத்து சின்னப்பாவின் கை கால்களை அறுத்துள்ளார்.
இருப்பினும் கோபம் குறையாததால் அவரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சின்னப்பா உயிரிழந்தார். என்று போலீஸாரிடம் பச்சையம்மாள் வாக்குமூலமாக அளித்தார். அதன் பிறகு, வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.