கணவனை கொன்று நாடகமாடிய மனைவி..வெளியான பகீர் காரணம் - சிக்கியது எப்படி?
கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடகமாடிய மனைவி
நாமக்கல் மாவட்டம் ஆலத்தூநாடு, ஊர்ப்புறத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாவதி (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளன. இந்த சூழலில், கணவன், மனைவி இருவரும் கேரளாவுக்கு எஸ்டேட் வேலைக்கு அவ்வப்போது சென்று வந்தனர்.
அப்போது சக்திவேல் (32) என்ற நபருடன் கலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளகாதலாகவும் மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த விஷயம் கலாவதியின் கணவருக்கு தெரியவர அவர் அடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு உண்டாகியுள்ளது. இதையடுத்து, கலாவதி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்ல, பிறகு சமாதானம் செய்து கணவர் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.
சிக்கியது எப்படி?
அப்போதும் சக்திவேலுடன் இருந்த கள்ளத்தொடர்பை கைவிடாமல் கலாவதி தொடர்ந்து போனில் பேசியுள்ளார். இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் கணவர் உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, மது போதையில் இருந்த கணவர் ரவிசந்திரனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் பற்றி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் கணவர் மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று கிடப்பதா அழுது கதறி நாடகமாடியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாவதி, அவரது கள்ளக்காதலன் சக்திவேல் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.