அக்காவை கொலை செய்த தங்கை- நடந்தது என்ன?
கணவருடன் தகாத உறவில் இருந்த அக்காவை, தங்கை கொலை செய்துள்ளார்.
கடலூர், சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதுடைய பெண். இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
தொடர்ந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தங்கை புவனகிரியில் தனது கணவர் மற்றும் 17, 15 வயது மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மனைவின் அக்கா தனியாக வசித்து வருவதால் அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார்.
தங்கை வெறிச்செயல்
இதனால் இருவரும் பழகி வந்துள்ளனர். அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
சம்பவத்தன்று அறுவடைக்காக அங்கு மகனுடன் சென்றிருந்த மனைவி, கணவனை அக்காவுடன் நெருக்கமாக பார்த்துள்ளார்.
உடனே, கணவர் தப்பி ஓடியுள்ளார். அக்காவை மிரட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். தாயுடன், மகன்களும் சேர்ந்து சேலையால் அவரது கழுத்தை இறுக்கிக்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனே விரைந்து வந்து மூவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.