டிக்டாக் மோகம்: நடிக்க சென்ற மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!
டிக்டாக் பிரச்சனையால் மனைவியை, கணவன் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
டிக்டாக் தகராறு
திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(38). இவரது மனைவி சித்ரா(35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சித்ரா அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார்.
இதனை அவர் கணவர் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதஙக்ளுக்கு முன் டிக்டாக் மூலம் அறிமுகமான நபர்களுடன் சென்னைக்கு சினிமாவில் நடிக்க சென்றுள்ளார். இதற்கு அவர் கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கணவன் கொலை
அதை மீறியும் சித்ரா சென்னை சென்று திருப்பூர் திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சித்ரா அதே பகுதியில் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் மகள்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், காலை நீண்ட நேரமாக சித்ரா வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் சித்ரா சடலமாக கிடந்துள்ளார். அதன்பின் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கழுத்தில் காயம் இருப்பதால். துப்பட்டா அல்லது சேலை போன்றவற்றைக்கொண்டு இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.