டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் மரணத்தில் திடீர் திருப்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் மரணத்தில் சகோதரர் போலீசில் திடுக்கிடும் புகார் கொடுத்துள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
டிக்டாக்கில் பிரபலமான சோனாலி போகட்
அரியானா மாநிலத்தில் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் சோனாலி போகட் (41). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நெறியாளர், சீரியல் நடிகை வலம் வந்தார். இருந்தாலும், டிக்டாக் செயலி மூலம்தான் அதிகளவிலான ரசிகர்களை இவர் பெற்றார்.
டிக்டாக் பிரபலத்தால், கடந்த 2019ம் ஆண்டு அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது.
ஆதம்பூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக போகட் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருந்தாலும், கட்சி பணிகளில் சோனாலி ஈடுபட்டு வந்தார். பிக் பாஸ் 14 வது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
மரணத்தில் திடீர் திருப்பம்
2 நாட்கள் படப்பிடிப்புக்காக சோனாலி கோவா சென்றிருந்தார். இவர் கடந்த 22ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின.
சோனாலியின் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக நேற்று முன்தினம் இரவு கோவா சென்றடைந்தனர்.
இதனையடுத்து, நடிகை சோனாலி தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால், சோனாலியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சகோதரர் பரபரப்பு புகார்
இது குறித்து சகோதரர் ரிங்கு டாகா கூறுகையில், சோனாலி மரணமடைவதற்கு சிறிது முன்தான் என் அம்மாவிடம் பேசினாள். அப்போது ரொம்ப கலக்கத்துடன் பேசினாள். அவளுடன் இருந்த 2 கூட்டாளிகள் மீது அம்மாவிடம் புகார் கூறினாள். சோனாலி மாரடைப்பால் இறக்கவில்லை. அவள் கொலை செய்யப்பட்டுள்ளாள். சோனாலியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
போலீசார் விசாரணை
சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் கோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சோனாலியின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.