டிக்டாக் பிரபலம் மாரடைப்பால் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிக்டாக்கில் பிரபலமான சோனாலி போகட்
அரியானா மாநிலத்தில் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் சோனாலி போகட் (41). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நெறியாளர், சீரியல் நடிகை வலம் வந்தார்.
இருந்தாலும், டிக்டாக் செயலி மூலம்தான் அதிகளவிலான ரசிகர்களை இவர் பெற்றார். டிக்டாக் பிரபலத்தால், கடந்த 2019ம் ஆண்டு அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது.
ஆதம்பூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக போகட் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருந்தாலும், கட்சி பணிகளில் சோனாலி ஈடுபட்டு வந்தார். பிக் பாஸ் 14 வது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
மாரடைப்பால் மரணம்
2 நாட்கள் படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்தார்.நேற்று இரவு கோவாவில் மாரடைப்பால் சோனாலி போகட் உயிரிழந்தார்.
பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகட்டின் மறைவிற்கு சமூகவலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சோனாலியின் கடைசியாக வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சோனாலி போகட் மறைவால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ -
Sonali Phogat dies of heart attack in Goa.#SonaliPhogat #TikTok #TeJran pic.twitter.com/wfzapzd91f
— सत्यमेव जयते (@won_india) August 23, 2022