போதையில் வந்து தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன் - தீர்த்துக்கட்டிய மனைவி..!

Attempted Murder Tamil Nadu Police Dindigul
By Vinothini May 01, 2023 06:28 AM GMT
Report

தினமும் போதையில் டார்ச்சர் செய்த கணவனை, மனைவி இரும்பு குழாயால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டார்ச்சர் செய்த கணவன்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்து உள்ள விராலிப்பட்டி எனும் ஊரை சேர்ந்தவர் வீரய்யன்.  இவருக்கு 35 வயது இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் 31 வயதான அபிராமி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

போதையில் வந்து தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன் - தீர்த்துக்கட்டிய மனைவி..! | Wife Killed Husband In Dindigul

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வீரய்யன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், இவர் தினமும் இரவு பகல் பார்க்காமல் குடித்து விட்டு அவரது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை மனைவி பலமுறை கண்டித்துள்ளார்.

மனைவி அடித்து கொலை

தொடர்ந்து இவர் குடித்துவிட்டு தகராறு செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அருகே இருந்த இரும்புக் குழாயை எடுத்து கணவரின் மர்ம உறுப்பில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வீரய்யன் துடிதுடித்து உயிரிழந்தார்.

போதையில் வந்து தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன் - தீர்த்துக்கட்டிய மனைவி..! | Wife Killed Husband In Dindigul

இந்நிலையில், இவரது மனைவி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.