இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் - காதலனுக்காக மனைவி செய்த கொடூர செயல்
இன்ஸ்டா காதலனுக்காக கணவனை மனைவி தீர்த்துக்கட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
கர்நாடகா மாநில கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பிரகாஷ். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 28 வயதான ஹர்ஷிதா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதன் பின் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஹர்ஷிதாவிற்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் குண்டா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, 2 மாதங்களுக்கு முன்னர் குண்டாவுடன் ஹர்ஷிதா வீட்டை விட்டு ஓடி விட்டார். இதுதொடர்பாக ஹர்ஷிதாவின் கணவர் பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஹர்ஷிதா வீடு திரும்பினார்.
கொலை
இதன் பின் கணவர் பிரகாஷ் உயிருடன் இருந்தால், இன்ஸ்டா காதலருடன் வாழ முடியாது என முடிவு செய்த ஹர்ஷிதா அவரை கொலை செய்ய திட்டமிடுள்ளார். இதன் பின், பணத்தை கொடுத்து அவரை கொலை செய்ய ஆள் அமர்த்தியுள்ளார். அவர்கள் பிரகாஷை தனியாக அழைத்து தாக்கினர். அப்பொழுது தப்பிக்க முயன்ற போது பிரகாஷை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு விபத்தில் அடிபட்டு இறந்தது போல நாடகமாடினர். ஆனால், அவரது உடலில் கத்திகுத்து இருந்ததை வைத்து பிரகாஷ் கொலை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பிரகாஷின் மனைவி ஹர்ஷிதாவை பிடித்து விசாரித்த போது, இன்ஸ்டாகிராம் காதலனுக்காக கணவரை அவர் தான் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஹர்ஷிதா மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான குண்டாவை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலனுக்காக மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.