உல்லாசத்திற்கு தடை - கள்ளக்காதலனுடன் கணவனை கொன்ற கொடூர மனைவி!
கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
கர்நாடகா, சிக்கரூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக்(30). இவரது மனைவி சல்மா(25). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன் சல்மா, ஜாபர் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த உறவை திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து சாதிக்கிற்கு தெரியவந்ததும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவர் மீது கோபமடைந்த மனைவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். உடனே இதனை காதலரிடம் கூறவே, இருவரும் சேர்ந்து இரவில் சாதிக்கின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்ததும் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
கணவன் கொலை
சாதிக் அதில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து உடலை குளியல் அறைக்கு இழுத்து சென்று ரத்த கறைகளை அகற்றி, வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக கூறி மனைவி நாடகமாடியுள்ளார்.
இந்நிலையில் சாதிக்கின் சகோதரருக்கு சல்மாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழவே, போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாதிக்கின் மனைவி சல்மாவிடம் விசாரித்தனர்.
அப்போது சாதிக்கை கள்ளகாதலன் ஜாபருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.