மகள்தான் சரியில்லை, தூக்கிலிட வேண்டும் - கணவரை கொன்ற மகளின் தாய் ஆவேசம்!
கணவனை கொலை செய்த பெண்ணின் தாயார் மகளை தூக்கிலிட கோரிக்கை விடுத்துள்ளார்.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், மீரட்டைச் சேர்ந்தவர் சவுரவ் ராஜ்புட். கடற்படை அதிகாரியான இவர் பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரவ், லண்டனில் இருந்து, முன்னறிவிப்பின்றி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மஸ்கன், சாஹில் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, மஸ்கன் மற்றும் சாஹில் இணைந்து, கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, டிரம்மிற்குள் அடைத்து சிமெண்ட் போட்டு பூசி விட்டு, தலைமறைவாகி விட்டனர்.
இதனையடுத்து 15 நாட்களுக்குப் பின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீஸார் சவுரவின் உடலை அழுகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், மஸ்கன் மற்றும் சாஹிலை கைது செய்துள்ளனர்.
கணவர் கொடூர கொலை
இது குறித்து முஸ்கான் பெற்றோர் பிரமோத் மற்றும் கவிதா ஆகியோர் அளித்த பேட்டியில், ''அவர் எங்களது மகளை கண்மூடித்தனமாக காதலித்தார். ஆனால் எங்களது மகள்தான் சரியில்லை. அவள் வாழ்வதற்கே தகுதியில்லை. அவளை தூக்கிலிடவேண்டும்.
அவரை குடும்பத்தில் இருந்து பிரித்து அழைத்து வந்தார். இப்போது கொலையும் செய்துவிட்டார். முஸ்கான் மலைப்பகுதிக்கு சென்றுவிட்டு வந்தவுடன் முஸ்கான் எங்களை வந்து பார்த்தார். அவர் எங்களிடம் ரஜபுத்தை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். உடனே அவளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றோம்.
முஸ்கானுக்காக அனைத்தையும் ரஜபுத் செய்தார். பல கோடி ரூபாய் சொத்துக்களையும், தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு தனியாக வந்தார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டும். ரஜபுத் எங்களுக்கும் மகன் தான். முஸ்கானும், சாஹிலும் போதையில் இக்கொலையை செய்திருக்கவேண்டும். அவர்கள் இரண்டு பேரும் சந்திப்பதை ரஜபுத் தடுத்தார்'' எனத் தெரிவித்துள்ளார்.