இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரைப் பணயம் வைத்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!
இளைஞர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரைப் பணயம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸ்
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதிலும் ரீல்ஸ் மூலம் பிரபலமடைய வினோத வீடியோக்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடியோக்கள வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரை பணயம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வேகமாகச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் ஜன்னல் கம்பிகளில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இளைஞர் ஒருவர் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
நீண்ட நேரமாக ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த போது நிலைமை மோசமாகி கிழே விழுந்தார்.
பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு மீண்டும் எழுந்து ரயிலின் உள்ளே ஏறுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.