ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - பகீர் திருப்பம்
ஹனிமூன் வழக்கில் மனைவியே ஆள் வைத்து கணவனை கொலை செய்துள்ளார்.
ஹனிமூன் வழக்கு
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). போக்குவரத்து தொழிலதிபரான இவருக்கு, சோனம் என்பவருடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பின் தேனிலவுக்காக இளம் தம்பதி இருவரும் கடந்த மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்றனர். பின், நோங்ரியாட் கிராமத்தில் தங்கியிருந்த இளம் ஜோடி, திடீரென மாயமானார்கள். உடனே இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஒரு பள்ளத்தாக்கில் இருந்து ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார்.
ஆனால் மனைவி சோனம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காசிப்பூரில் வைத்து போலீசாரால் சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணையில், சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் பிளேவுட் கடையில் வேலை செய்துவந்த ராஜ் குஷாலா என்ற இளைஞருக்கும் காதல் இருந்துள்ளது.
திடீர் திருப்பம்
குஷாலா, சோனத்தை விட 5 வயது இளையவர். அப்போதுதான் சோனத்திற்கு ராஜா ரகுவஞ்சியுடன் திருமணம் ஆகியுள்ளது. இதில் விருப்பமில்லாத அவர், கணவரை ஹனிமூன் அழைத்துச்சென்று அங்கு மலைப்பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, அடியாட்களை வைத்து கொலை செய்துள்ளார்.

மேலும், உடலை சிரபூஞ்சி பள்ளத்தாக்கு பகுதியில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது சோனம் அவரது கள்ளக்காதலன் குஷாலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை திசைதிருப்பவே தனது மகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும், வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சோனத்தில் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan