குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவன் - கல்லை போட்டு கொடூரமாக கொன்ற மனைவி!
காஞ்சிபுரத்தில் குடிபோதையில் வந்த கணவனை கல்லை போட்டு மனைவி கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் 32 வயதான சந்தானம், இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது மனைவி 26 வயதான வேண்டா. இவருக்கு முன்னரே திருமணம் ஆன நிலையில் 6 வயது குழந்தை ஒன்று உள்ளதாக தெரிகிறது.
பின்னர் சந்தானம் இவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடம்ன ஆன நிலையில் மனைவி 6 மாதம் கர்பமாக உள்ளார்.
மேலும், இவரது கணவன் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் மனைவியை சந்தேகத்துடன் பேசி அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
கொலை
இந்நிலையில், அவர் எப்பொழுதும் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்து அதே போல் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார்.
மேலும் ஆத்திரம் தாங்காமல் அவர் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சந்தானம் உயிரிழந்தார். பிறகு ஐவரும் தன்னுடைய சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.