காஞ்சிபுரத்தில் அம்மா உணவகம் தரைமட்டம் - பெரும் விபத்து தவிர்ப்பு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இன்று அதிகாலை அதிகாலை பால் சீலிங் முற்றிலும் சேதம் அடைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை அதன் நுழைவுவாயில் அருகே காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. அதிகாலை 6 மணிமுதல் மாலை 3 மணி வரை இந்த உணவகம் இயங்கும்.
அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள், உடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் உணவகத்தில் பால்சிலிங் எனும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் கலவை, வெப்பம் தவிர்க மேல்தட்டு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 2 மணி அளவில் பால் சீலிங் முழுவதும் கீழே விழுந்து முற்றிலும் சேதமடைந்தது அதனுடன் அமைக்கப்பட்டிருந்த மின்விசிறிகள் அனைத்தும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது.
அதிகாலையில் இச்சம்பவம் நடைபெற்றதால் , காலையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் உடன் தங்கியுள்ள நபர்கள் என பலர் விபத்தில் சிக்கியிருக்கக்கூடும்