தகாத உறவு.. 33 நாட்கள் கணவனை கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி!
கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷ ஊசி போட்டு மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
மகாராஷ்டிரா, நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சதீஷ் கேசவரா தேஷ்முக். இவரது இரண்டாவது மனைவி சுகாசினி. இவரும் டாக்டர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சுகாசினியுடன் தொடர்பில் இருந்த போது முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அப்பொழுது முதல் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தில் தேஷ்முக் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக தனது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கணவனுக்கு விஷ ஊசி
அது அதிகரிக்கவே திடீரென மனைவி பணிபுரியும் மருத்துவமனை சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் அருண் காண்டேகர் என்பவருடன் மருத்துவமனையில் அருகே அமர்ந்து இருந்திருக்கிறார். தொடர்ந்து, மனைவியிடம் இந்த உறவு குறித்து கேட்டபோது மூவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அறிந்த கணவனை கொல்ல சுகாசினி முடிவு செய்துள்ளார். அதன்படி, கணவருக்கு, கள்ளகாதலனுடன் சேர்ந்து மனைவி விஷ ஊசி செலுத்தியுள்ளார். அதனால், தேஷ்முக் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து 33 நாட்கள் கோமாவில் இருந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து தேஷ்முக்கின் மகன் போலீஸாரிடம் தனது தாய் தான் கொலைக்கு காரணம் என புகார் அளித்துள்ளார். ஆனால், சுகாசினி கள்ளக் காதலனுடன் தலைமறைவாகி உள்ளார்.