கணவன் முகற்றில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் - அதிரவைக்கும் சம்பவம்!
கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளத்தொடர்பு?
கர்நாடகா, மச்சே பகுதியில் வசித்து வருபவர் அனுமந்தபாட்டீல்(57). இவரது மனைவி வைஷாலி (53). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், அனுமந்தபாட்டீலின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி வைஷாலி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில், சம்பவத்தன்று வைஷாலி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.
மனைவி வெறிச்செயல்
அப்போது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வைஷாலி கூறியதாக தெரிகிறது. இதற்கு அனுமந்தபாட்டீல் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த சமையல் செய்ய அடுப்பில் வானெலியில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை கணவர் என்று கூட பாராமல் அனுமந்தபாட்டீல் மீது ஊற்றினார்.
இதில் அவரது முகம், மார்பு, வயிறு, கைகள், தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.