கணவனை கவனித்து திருப்திபடுத்த பெண்கள் தேவை... மனைவியின் விசித்திர விளம்பரம்!

Viral Video Thailand Relationship
By Sumathi Aug 13, 2022 09:56 AM GMT
Report

பெண் ஒருவர் தன் கணவனை கவனித்துக் கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விசித்திர விளம்பரம்

தாய்லாந்தை சேர்ந்தவர் பதீமா சாம்னன்(44). இவர் தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், திருப்திபடுத்தவும் பெண்கள் தேவை என விளம்ப்ரம் ஒன்றை வெளியிட்டார். அதை ஒரு வீடியோ பதிவாக தயாரித்திருந்தார்.

கணவனை கவனித்து திருப்திபடுத்த பெண்கள் தேவை... மனைவியின் விசித்திர விளம்பரம்! | Wife Hires Mistress To Keep Her Husband Happy

அதில், "என்னுடைய கணவனை கவனித்து கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

பெண்கள் தேவை

உங்களுக்கு மாதம் ரூ.33,800 சம்பளம் கிடைக்கும், இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

கணவனை கவனித்து திருப்திபடுத்த பெண்கள் தேவை... மனைவியின் விசித்திர விளம்பரம்! | Wife Hires Mistress To Keep Her Husband Happy

மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

வைரல் பதிவு

அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். என் கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன்.

அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை." எனக் கூறியுள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இது குறித்து அவர் கணவர் கூறியதாவது,

கணவர் பதில்

"என்னைக் கவனித்துக் கொள்ள யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள். "அந்த பெண்களும் எங்கள் குடும்ப பெண்கள் போலவே நடத்தப்படுவார்கள், மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்ப பெண்கள் போலவே வேலை செய்வார்கள்.

என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் இருக்காது என கூறினார்.