கணவரோட சம்பளம்... அல்டிமேட்டா யோசிச்ச மனைவி! என்ன செய்தார் தெரியுமா?

India Relationship
By Sumathi Oct 04, 2022 10:11 AM GMT
Report

கணவரின் வருமான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்துக்கொண்ட மனைவி.

வருமான விவரம்

சஞ்சு குப்தா என்ற பெண் தனது கணவரின் வருமான விவரங்களைக் கோரி ஆர்டிஐ தாக்கல் செய்துள்ளார். முதலில், மத்திய பொதுத் தகவல் அலுவலர் (CPIO), பரேலி வருமான வரித் துறை அலுவலகம், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.

கணவரோட சம்பளம்... அல்டிமேட்டா யோசிச்ச மனைவி! என்ன செய்தார் தெரியுமா? | Wife Gets Husband Income Details Using Rti Act

ஏனெனில், கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, முதல் மேல்முறையீட்டு ஆணையத்தில் (FAA) அப்பெண் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், மத்திய பொதுத் தகவல் அலுவலரின் உத்தரவு செல்லும் என முதல் மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்தது.

மனைவி செய்த செயல்

இதையடுத்து, மத்திய பொதுத் தகவல் அலுவலரிடம் அந்த பெண் இரண்டாவது மேல்முறையீடு செய்தார். அதனையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கடந்தகால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் சிலவற்றை ஆய்வு செய்து

செப்டம்பர் 19, 2022 அன்று தனது உத்தரவை வழங்கியது மத்திய தகவல் ஆணையம். 15 நாட்களுக்குள், கணவரின் வருமானம் பற்றிய விவரங்களை மனைவிக்கு வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.